"டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
"ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!"
"ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
"அவர் பிரம்மாண்டமான பல் டாக்டர்..."
"அப்படியா...?"
"ஆமா... "பல் செட்"டுக்குக்கூட தோட்டாதரணியைக் கூப்பிடுவார்னா பார்த்துக்கோயேன்!"
"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"
"இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"
"நீங்க என்ன சொல்றீங்க...?"
"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
No comments:
Post a Comment